இலங்கையில் தமிழர்கள் எதிர்காலம் பற்றிய தேடல் மீது முதலில் ஷோபாசக்தியால் எழுதப்பட்ட கட்டுரையை ஆர்வமிக்க அன்பர்களின் பார்வைக்கு இடுகையிட்டிருந்தேன். அதனைத் தொடர்ந்து படிப்பவர்களின் சிந்தனையைத் துண்டும் வண்ணம் அமைநத்துள்ள யமுனா ராஜேந்திரனின் கட்டுரையை உங்கள் பார்வைக்கும் அதன் மீதான சிந்தனைக்கும் தருகிறேன். கீழுள்ள கட்டுரை உயிரோசை இணைய இதழில் வெளிவந்தது.
யமுனா ராஜேந்திரன் தமிழ் வாசகர்களிடமும், தமிழ் சிந்தனையாளர்களிடமும் அறிமுகம் வேண்டாதவர். அரசியல், சினிமா, இலக்கியம், மொழிபெயர்ப்பு என பல விடயங்களில் நீண்டகால ஈடுபாடு கொண்ட கட்டுரையாளர், பேச்சாளர். அவர் தமிழருக்கு அறியத்தந்த விஷயங்கள் நிறைய என்றால் அது மிகையில்லை.. லத்தின் அமெரிக்காவின் புரட்சியாளர்களையும் மத்திய கிழக்கின் கவிஞர்களையும் பெரும் உழைப்பினுடாகத் தேடி அறிமுகம் செய்தார். ஐரோப்பாவிலிருந்து வெளிவந்த விடுதலைப்புலிகளின் அல்லது அவர்களது ஆதரவு பத்திரிகைகளும், வானொலிகளும், தொலைக்காட்சிகளும் அவருடைய எழுத்துக்களை தொடர்ந்து பிரசுரித்தன, வெளியிட்டன. லணடனில் இயங்கும் ஐ. பி.சி. வானொலியில் பல காலம் தரமான நேர்முகங்களையும் நிகழ்ச்சிகளையும் சன்மானம் எதுவும பெற்றுக் கொள்ளாமலே செய்தார்.அவருடைய சிந்தனையில் உதித்த கட்டுரையை உங்கள் கவனத்திற்கு இடுகிறேன்.
மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் : வியட்நாம் மற்றும் பொலிவிய அனுபவங்கள்
யமுனா ராஜேந்திரன்
தமது சர்வதேசிய உரிமைகளுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தில் ஒன்றிணைந்த மக்களை, அந்த ஒன்றுபட்ட மக்களின் எதிர்ப்பை, உலகின் மிகப்பெரிய வலிமை வாய்ந்த பொருளாதார அல்லது ராணுவ சக்தி என்பது என்றும் வெற்றி கொள்ள முடியாது என்பதைத்தான் இதுவரையிலான வரலாற்று உண்மை தெளிவுபடுத்துகிறது. அதிகாரத்திற்கு ஒரு எல்லை உண்டு. அமெரிக்காவும் அதனோடு இணைந்திருக்கும் வல்லரசுகளும் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களது அதிகாரம் மிகப்பெரியதாக இருக்கலாம். தவிர்க்க முடியாமல் அதற்கு வரம்பு உண்டு. அனாதிகாலம் தொட்டு, அது சோசலிச சமூகமோ அது முதலாளித்துவ சமூகமோ எதுவானாலும், மக்களின் நலனுக்காக நீங்கள் கடமையாற்றுவீர்களானால் அந்தக் காரியங்கள் உங்களுக்கு நல்லது செய்யும். மக்களுக்கு எதிராக நீங்கள் காரியம் ஆற்றுவீர்களானால் அதே காரியங்கள் உங்களுக்கு எதிராகவே திரும்பும்.
வியட்நாமிய மக்கள் படையின் தளபதி
ஜெனரல் நிகுயன் கியாப்
கட்டுரையைத் தொடர்ந்து படிக்க அன்பர்கள் கட்டுரையின் தலைப்பை அல்லது கீழுள்ள இணைப்பை அழுத்துமாறு வேண்டுகிறேன்.
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=1758
திங்கள், ஜூலை 27, 2009
சனி, ஜூலை 25, 2009
ராஜமார்த்தாண்டனின் மரணம்
திரு. ராஜமார்த்தாண்டன் அவர்களின் மரணச் செய்தியை முதன் முதலில் எங்கே படித்தேன் என்பது ஞாபகமில்லை. ஆனால் அச்செய்தி என் மனதிற்குள்ளும் ஒரு சலனத்தை, உறவு வட்டத்தினுள் மிக நெருக்கமாய் இருந்த ஒருவர திடீரென பிரிந்துவிட்ட இழப்பு தரும் கவலையைத் தந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் தமிழ் நாட்டில் நண்பர் ஒருவரின் வீட்டில் கண்ணில்பட்ட ஒரு "இலக்கிய சிறு பத்திரிகையில்" ராஜமார்த்தாண்டனின் பெயரை முதன்முதலாக பார்த்தேன். அதனைத் தொடர்ந்து நான் அவருக்கு எழுதிய கடிதத்தின் விளைவாக, அவர் ஆசிரியராக இருந்த "கொல்லிப்பாவை" யின் அத்தனை இதழ்களையும் முகம் தெரியாத ஈழத்து நண்பருக்கு அனுப்பியிருதார். தமிழின் நவீன இலக்கியத்தின் போக்கினை எனக்கு கொல்லிப்பாவை தான் அறிமுகம் செய்தது என நான் பல முறை நினைத்ததுண்டு. அந்த நினைப்பு வந்தபோதெல்லாம் ராஜமார்த்தாண்டனின் பரோபகாரமும் நினைவுக்கு வந்தது. ஐரோப்பாவுக்கு குடிபெயர்ந்த பின்பு தமிழ் நாட்டிற்கு ஒரு நாள் போய் வர வேண்டும் என்ற மாறாத கனவில், ராஜமார்த்தாண்டன் அவர்களை நேரில் சந்ததிக்க வேண்டும் என்பதும் ஒரு பகுதி. அது இனிமேல் சாத்தியமில்லை என்று நினைத்தபோது மனதுக்கு நெருக்கமானவர்களின் இழப்பு தரும் வலியின் வேதனையை அனுபவித்தேன். அவருடைய எழுத்துக்களை நான் படிக்காமல் என்றும் தவிர்த்தது இல்லை. ஈழத்தின் இளம் கவிஞர்களின் ஆக்கங்களை அயராமல் தேடிக்கண்டு தமிழ் நாட்டுக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அவருடைய பணியின் வழியில் அவர் எவ்வித பக்க சார்பையோ அனுதாபத்தையோ காட்டவில்லை என்று தான் நான் உணர்ந்துகொண்டேன்.
"காலச்சுவடு" ஆசிரியர் திரு. கண்ணன் அவர்கள் எழுதிய அஞ்சலியினுடாக ராஜமர்த்தானடனின் இழப்பின் துயரத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
"காலச்சுவடு" ஆசிரியர் திரு. கண்ணன் அவர்கள் எழுதிய அஞ்சலியினுடாக ராஜமர்த்தானடனின் இழப்பின் துயரத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
அஞ்சலி
பேரன்பு, அமைதி, உறுதி
கண்ணன்
ஒரு மரணம் சூழலில் எல்லோரையுமே பாதிக்கிறது. ஆனால் பாதிப்புகளின் தன்மை மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ராஜமார்த்தாண்டனின் மரணம் ஏற்படுத்திய பாதிப்புகள் பல தளத்திலானவை. என் இரண்டாவது மகன் முகுந்தனுக்கு மார்த்தாண்டன் எப்போதும் அளவற்ற பிரியத்தை வெளிப்படுத்தும் மாமா. பள்ளியில் தொலைந்துபோகும் பென்சில், ரப்பர் ஆகியவற்றைச் சத்தமில்லாமல் பதிலீடு செய்துவிடும் ரகசிய உறவும் உண்டு. சாரங்கனுக்குத் தமிழ் கற்பித்தல், வீட்டுத் தோட்டத்திலிருந்து அவனுக்குப் பிரியமான கொய்யாப்பழம் கொண்டு வருதல் - இருவர் முகங்களிலும் சு.ரா.வை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். ‘காலச்சுவ’டில் பணியாற்றுவோருக்கு ‘சாரின்’ இழப்பு அளப்பரியது. கோபமேபடாமல் பலவற்றையும் கற்றுத்தந்து வழிகாட்ட, பாதுகாக்க ஒரு ஆன்மா. அவர் குழந்தைகளுக்கு எல்லாக் குறைபாடுகளையும் கடந்து மிகுந்த அன்பைப் பொழியும் தந்தை.
....... கட்டுரையை தொடர்ந்து படிக்க அன்பர்கள் கீழ்வரும் தொடுப்பை அழுத்துமாறு வேண்டுகிறேன்.
http://www.kalachuvadu.com/issue-115/page31.asp
வெள்ளி, ஜூலை 17, 2009
பிரபாகரன் ஜீவிக்கிறார்
எமது தாய் மண்ணில் நடந்து முடிந்தவை மிகுதியான மனக்கவலையையும் தீராத சோகத்தையும் தருகின்ற போதிலும் நாம் வாழும் சமுகத்தின் மீது அக்கறை கொள்ளும் அனைவரும், அச்சமுகத்தின் எதிர்காலம் தொடர்பாக விருப்பு வெறுப்புக்களை தாண்டிய நிலையில் கருத்துப பரிமாற்றம் ஒன்றை நிகழ்த்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நோக்கத்தை முன்வைத்து, எனது மனப்பரப்பில் நிகழ்ந்த அனைத்து அவலங்களையும் தாண்டி, கீழுள்ள கட்டுரையை உங்கள் கவனத்திற்கு இடுகையிடுகிறேன். தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து எமது சமுகம் பற்றிய உங்கள் அக்கறையை அறியத்தாருங்கள்.
பின்வரும் கட்டுரை எழுத்தாளரும், கட்டுரையாளரும் சமூக நல செயல்பாட்டாளருமான ஷோபாசக்தியால் எழுதப்பட்டது. அவருடைய வலைத்தளத்திலிருந்து இதனைப் பிரதி செய்துள்ளேன்.
பிரபாகரன் ஜீவிக்கிறார்
சரியாக இருபத்தைந்து வருடங்களிற்கு முன்பாக நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமில் இருந்தபோது ஒவ்வொருநாள் காலையிலும் நாங்கள் ஏற்கும் உறுதிமொழியின் வாசகங்கள் இப்போது எனக்கு முழுமையாக ஞாபகத்திலில்லை எனினும் அந்த உறுதிமொழியின் முதல் வரியும் இறுதி வரியும் எனக்கு இன்னமும் நினைவிலுள்ளன. உறுதிமொழியின் முதல்வரி “எமது புரட்சிகர இயக்கத்தின் புனித இலட்சியமாம் சோசலிஸ தமிழீழம் அடைய” என்பதாய் இருக்கும். இறுதிவரி “எனது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்பேனென்றும் உறுதியேற்கிறேன்” என்பதாக இருக்கும்.
தலை கோடரியால் பிளக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருந்த எனது முன்னாள் தலைவரின் உடலத்தை இணையத்தளத்தில் நான் பார்க்க நேரிட்டபோது எனது கண்கள் தாழ்ந்துபோயின. அந்த உடலம் அவருடையதுதான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை.
....... கட்டுரையை தொடர்ந்து படிக்க அன்பர்கள் கீழ்வரும் தொடுப்பை அழுத்துமாறு வேண்டுகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)